தடமது பதித்தெழும் தனித்துவம்

கெங்கா ஸ்ரான்லி

தரணியில் பிறந்தது சாதனை
தனித்துவ ம் பேணுவது சோதனை
மரணிப்பது அவரவர் விதியெனில்
மாற்றுவது எந்த வகைதனில்
தளமொன்று அமைக்க பட்டபாடு
தனக்கென ஒரு இடம்பிடித்து
பிறர்க்காக வடிவமைத்தது
பிறரும் அதை அனுபவிப்பது
அடுத்த தலைமுறை அடியெடுத்தது
அனைத்திலும் அறிமுகம் செய்தது
இளையோரை ஊக்கு வித்தது
இன்றவர் எழுந்து நிற்பது
எடுத்த நோக்கம் நிறைவேற
கொடுத்த சந்தம் வலுவாக
வகைப் படுத்திய நீங்கள்
வையகத்தில் வலம் வர
தடமது பதித்தெழும் தனித்துவம்
தொடரட்டும் பலமுறை புணருத்தாரணம்
அணிசேரும் உதவ ஆயிரம்
அதுவே உங்கள் தனித்துவம்!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading