நகைப்பானதோ மனிதம் 1

ஜெயம்
அரவணைப்பை கேட்டு ஏங்குதே ஒரு மனம்
அவசர வாழ்க்கைகைக்குள் சிறைப்பட்டு இன்னொருவர் தினம்
வீதியின் ஓரமாக அழுக்குப் போர்வைக்குள் அவர்
சேதி புரிந்திருந்தும் மெதுவாக பின்வாங்கி இவர்

எந்த மதம் அன்பைத் தடை செய்தது
எந்த கடவுள் இரக்கத்தை இரத்து செய்தது
குழந்தைகளின் மௌன அழுகையில் பஞ்சத்தின் வெளிப்பாடு
வளங்கொண்ட மனிதர்களோ பார்த்தும் பாராத மனத்தோடு

பறவைகள்கூட தன்னலமின்றி தன் கூட்டத்தை காக்கின்றது
சிறப்பான படைப்பாம் மானிடர்க்கோ புத்தியேனோ வேர்க்கின்றது
வாயாலே வடைசுடும் ஏமாற்றுகாரராக பல மனிதர்
பேயான பேய்கூட மனமிரங்கி காட்டிவிடும் மனிதம்

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading