நன்றியாய் என்றுமே

ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய் இருந்து பலரை ஏற்றிவைத்தார்
பேணி நல்லன்பை பெற்றவராய் அரவணைத்தார்

ஈன்ற தாயைப்போல உறவோடு இருந்தவர்கள்
சான்றோராக்க மாணவர்களை தங்களை ஒறுத்தவர்கள்
என்றென்றும் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்
நன்றிக்கும் வாழ்த்துக்கும் வாழ்க்கையிலே தகுதியானவர்கள்

அடைந்த வெற்றிகளுக்கு அடிப்படை காரணம்
கிடைத்த முகவரிக்கு மூலமே ஆசிரியரினம்
ஆறாமறிவை ஊட்டியவர்க்கு நன்றியை என்றுமே
கூறாமல் இருந்திடலாமா கூறிடுவீர் என்றென்றுமே

04-09-2025

Nada Mohan
Author: Nada Mohan