“நன்றியாய் என்றுமே”

நேவிஸ் பிலிப் கவி இல (448)

நன்றி என்ற மூன்றெழுத்தை
மனதோடு பதித்து
மண்ணாலே உருவாக்கி
உயிர் மூச்சை எனக்களித்த
இறைவனை நன்றியாய் என்றுமே
போற்றியே

பூமியில் எம்மை பிரசவித்த பெற்றோர்
இப் பிறப்பின் பெருமை
இயற்கையின் சிறப்பு
எல்லையில்லா இன்பம்
பாதுகாப்பு இல்லம்

அறிவென்னும் ஒளியை
அகத்தினில் ஏற்றி
இகத்தினில் நாமும்
மதிப்புடன் வாழ
எம்மை செதுக்கிய ஆசான்

அதிகாலை வேளை சூரிய சந்திர ஒளியும்
எம் மன மகிழ்வாய் நாளும்
தளம் தந்து களம் இறக்கும்
பாமுகமும்

நன்றியாய் என்றுமே
நினைத்திங்கே
கவிதையாய் பொழிகின்றேன்
வாழ்த்தினிலே……………
நன்றி…………

Nada Mohan
Author: Nada Mohan