முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

நாதன் கந்தையா

ஆற்றல்.
*********

ஆதிக்க சாதியினரால்
கீழ்சாதி என்று
ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள்.
ஒதுக்கு புறமாக
மலை அடிவாரத்தில்
குடியமர்த்தப்பட்டனர்.

தென்னை ஏறி
தேங்காய் பிடுங்கவும்
நாற்று நட்டு அறுவடை செய்யவும்
பால் மாடு மேய்க்கவும்
கீழ்சாதி மக்களின் ஆற்றல்
ஆதிக்கசாதி பண்ணையாருக்கு
நித்தமும் தேவைப்பட்டது.

மாவு இடிக்கவும் மாங்காய் பிடுங்கவும்
பண்ணையாருக்கு
குளிக்க சுடுநீர் வைக்கவும்
கீழ்சாதி பெண்கள்
பண்ணையின் பின்பக்க வழியால்
அனுமதிக்கப்பட்டனர்.

மலையிருந்து ஊற்றாகி கசிந்த நீர்
ஆறாக உருவெடுத்து
கீழ்சாதி மக்களின்
குடியிருப்பை கடந்து
பண்ணையார் வீட்டு வழி பாய்கிறது.

கீழ்சாதியினர் கழித்த எச்சங்களும்
காலை கடனை முடித்து
கழுவிய நீரும்
பிள்ளையார் கோவில்
தெப்பக்குளத்தை நிறைத்து
பண்ணையை கடந்து போகிறது.

பண்ணையாரின் துறையில்
கீழ்சாதியினர் குளிக்க தடை
பிள்ளையார் கோவிலுக்கு போக
கீழ்சாதி மக்களுக்கு தடை.

-நாதன் கந்தையா.-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading