முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(122) 15/02/24
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்

வானமெனும் வீதியிலே
மேகத் திரள் ஊடறுத்து
தென்றலிலே தவழ்ந்துவந்தாய்
செந்தமிழால் படையலிட்டு
எம் செவிக்குவிருந்தாகி
மனத்துக்கு மருந்தானாய்

என்வீட்டு யன்னல் வழி
மென்னசைவாய் நீ புகுந்து
ஆன்மாவின் வெளிச்சமாய்
அறிவுக்கு தெளிவாய்
பொருள் நிறைந்த பேச்சு
மழலைகளின் வீச்சு

காற்றின்அசைவினிலே
தினம்மொரு சேதியுடன்
பேதமின்றி பேச்சுக்களும்
கருத்துப் பரிமாற்றங்களும்
கலந்துரையாடல்களும்

அக சுதந்திரம் கொண்டோம்
ஓரினமாய் இணைந்தோம்
காற்றின் வழி மொழியாக
வாழ்வு தந்த உன்னை
மறப்போமோ நாமும் நீ
எந் நாளும் வாழ்க. ,,,,,,,,,,,,
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading