பட்ட மரம்

வஜிதா முஹம்மட்
வழுவிழந்த வேர்
இலையிழந்த தேர்
அலங்கரித்த குடை
ஆழ்மண் ௨ரமிடை
பாரியாட்டம் கொடை
வாழ்ந்து ஓய்ந்த சடை

நித்தமும் நின்றாய்
நிழல்தான் தந்தாய்
பட்டுப்போய் வெந்தாய்
பாரின் வாழ்வு இதுதான்
தத்துவம் சொன்னாய்
மானிடா சிந்தித்துப் பார்
மனிதம் துறந்த போர்
மண்ணில் பாரம் நீ
என்னைப் பார் நீ
க௫வோடு க௫ணை
வாழ்வோடு தொடர்கை
மறைந்த பின்னும் ஈகை

காய்ந்துபோய் விழுந்தாலும்
ச௫காவேன்
சிறிதாய் நான் விழுந்தாலும்
சுள்ளியாவேன்
சாய்ந்து போய் விழுந்தாலும்
விறகாவேன்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading