நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பவானி மூர்த்தி

எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே

எழுத்தின் வித்தாய் எழுவாய்
தமிழே
——எங்கும் ஒலிக்கும்
என்றன் தமிழே
பழுத்த கனியாய் பண்பில்
சுவைப்பாய்
——–பாரில் ஒங்கிப் பருவம்
பார்ப்பாய்
விழுந்த இடத்தில்
விதையாய் முளைப்பாய்
———விருட்சம் நீதான்
விரைந்து வளர்வாய்
முழுதும் போற்ற முத்தம்
இடுவாய்
– ———-முத்தாய் மின்னி
முகப்பாய் நிற்பாய்

ஒழுக்கம் தன்னை ஓதும்
தமிழே
——–ஒன்றும் மக்கள்
ஒன்றச் செய்வாய்
இழுக்கோ உனக்கும்
இல்லை இல்லை
—–இன்சொல் தானே
உன்றன் எல்லை
விழுப்பம் தரவே விரைந்து
வாராய்
———வீடும் நாடும் விரவி
வாராய்
எழுத்தும் வித்தும் என்றும்
பூக்க
——–ஏற்றம் பெற்றாய்
என்றன் உயிரே
—- பெற்றாய் ஏற்றம்
என்றன் உயிரே !

அனைத்தும் மாச்சீர்களை
மட்டுமே கொண்டு எழுதப்பட்ட
எண்சீர் விருத்தம்

அன்புடன் வாணிக்கும் ,தொகுப்பாளினிக்கும் என் இனிய வாழ்த்துகள்
நன்றி வணக்கம்
06.06.2023

Nada Mohan
Author: Nada Mohan