பாலதேவகஜன்

பணம்

தினம் உனை தேடி ஓடி
திக்கெட்டும் அலைகின்றேன்
மனம் கொண்ட பேராசை
உனையே பின்னே தொடருதே.

கனதியானது நீ என்று
என் காலத்தை கரைக்கிறேன்
கட்டிலில் நான் வந்தபின்னே
கனதி எதுவென்று உணர்கின்றேன்.

உனையே நேசித்ததாலே
உறவுகளை வஞ்சித்தேன்
உயிர் ஊசலாடும் தருணம்
எனையே வஞ்சித்தேன்.

கொண்ட குணம் கெட்டேன்
கண்ட கடியதும் கற்றேன்
நீ என் கையில்
நிறைவாய் இருந்ததினாலே.

தேவைகள் தீர்ப்பதில்
தேவதை நீ!
தேவையில்லா வில்லங்கங்களின்
வேதனை நீ!

சோதனைகளில் சோரம்போகாது
சாரமாய் நின்றதும் நீ!
சாதனைகளின் படைப்பினில்
தலைக்கனமாய் நின்றதும் நீ!

நிறைவாய் இருந்தால்
நிம்மதி நீ!
நிறையவே இருந்தால்
பெருந்துயர் நீ!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading