பாலதேவகஜன்

பாமுகமே வாழி

பார்ப்போரும் கேட்போரும்
பரவசம்! கொள்வாரே
படைப்போரும் பகிர்வோரும்
பரிணாமம்! அடைவாரே
பாமுகமே! உன் மலர்வாலே.

ஆற்றலும் ஆளுமையும்
அகன்றிடாது காத்துநின்ற
அரும்பணியை ஆற்றுகின்ற
பாமுகமே! போற்றி போற்றி.

தலைமுறைகள் தாண்டியுமே
தமிழ் பரம்பும் தம்பணியை
தளர்வின்றியே தொடர்ந்திடும்
பாமுகமே! போற்றி போற்றி.

இலைமறை காயாக
இருப்போரின் திறமைகளை
வெளிக்காட்டி ஒளிர்விக்கும்
பாமுகமே போற்றி போற்றி.

சந்தம் சிந்தும் சந்திப்பை
செவ்வனே ஆற்றுகின்ற
பாவையண்ணாவை தந்த
பாமுகமே! போற்றி போற்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading