பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)…பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026

மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும் நினைவுநாள் அல்ல
சொற்களால் விபரிக்க முடியாதநாள்
உணர்வின் வலிகளை உணர்த்திடும்நாள்
வலிகளின் வரலாற்றுப் பதிவேடிது !

கண்ணீரும் செந்நீரும் ஆறாகப்பாய
உண்ணீரும் இன்றித் தவித்தஉறவுகளை
நந்திக்கடலே சாட்சி சொல்லும்
நடந்தது என்னவென்று நறுக்கென உரைக்கும் !

எரியும் நினைவுகளின் சாட்சியாக
சொல்லும் கதைகளோ ஆயிரமாயிரம்
கதறிய குரல்கள் காற்றில்கரைய
சிதறிய உடல்கள் மண்ணில்புதைய
உறவுகளின்றி அநாதைகளாகி
உயிரைத்தவிர இழந்தோம் அனைத்தையும்
சிதறியது உயிர்கள் மட்டுமல்ல
எம்வாழ்வின் கனவுகளும் வேர்களுமே
பெருவலி சுமந்த பேரிடர்இதுவே !

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading