புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

மட்டுவில் மரகதம்

மொழி

பல் மொழி பேசவும்
கற்க கசடற கற்கவும்
இனியவை பல கூறி
ஆறி நோயிலிருந்து தேறுதலடையவும்
அவசியமே அவசியம்
மொழியில் அருமை

இனிமையான மொழி
இனிக்கும்
மெல்ல உள் மனதில்
நுழையும்
அனைத்தையும் கொண்டு வரும்
கனல் போல் கக்கும்
உணர்ச்சி குறிப்புடன்
உயிரற்ற கூட உயிர்க்கவும் வைக்கும்
பேசவும் வைக்கும்
எம் மொழியில்
பேசினாலும் புரியுமாம் பிரபஞ்சத்திற்கு

ஒரு கணம் பேச
முடியாமை ஏற்பட்டால்
அதன் விளைவாக
நீரிலே அழுகின்ற
ஆமை போல மாறுமே!
யாரறிவார் வேதனையை

பேச ஒரு மொழி
இருந்தால் போதும்
உலகத்தி்ல்
ஒவ்வொன்றும் ஒன்றோன்று
தொடர்பாடல் கொள்கிறது
உள்ளே உள்ளவற்றை
வெளிய கொண்டு வந்து
வருத்தம் இல்லாதவனாக
நிறுத்திவிடும்
பேச வேண்டும்
பேசிய அந்த மொழியாலே
மனமார பேசினாலே
நோய் விட்டு போய் விடுமாம் மூன்னோர் வாக்கு

உயிரான தாய்வழி
தமிழ்மொழி உயர்வாக வேண்டும்
உயிரோடு உயிராக
வாழையடி வாழையாக
உறவாடி மகிழ
இனிய மொழி
தாய் மொழி போல் எங்க உண்டு

இதயங்களிலிருந்து
கொண்டு வந்து
பிரபஞ்சம்
முழுவதும் பரப்பிட ஒன்று போதும்
காசு பணம் சொத்து நகை சம்பாதிக்க தேவையில்லை
பரப்ப
இனிய மொழி ஒன்று போதுமே
போதுமே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading