மனோகரி ஜெகதீஸ்வரன்

பாமுகமே வாழீ

பாமுகமே வாழீ
பாரூறும் பாமுகமே வாழீ
படைப்பகம் கொண்டவளே வாழீ

நேர்முகம் கொண்டவளே நீவாழீ
நெஞ்சகத்தில் நிலைத்தவளே நீவாழீ
பாரகம் காட்டுபவளே நீவாழீ
நேரத்தில் ஊர்பவளே நீவாழீ

நிகழ்ச்சிகள் பலதை எய்து
செய்தாய் எம்மைக் கைது

உந்தன் பாமுகம் கண்டு
உள்ளக் குரலொலி திண்டு

போகுதேயெம் பொழுதுகள் இனிதாய்
விழிக்குதே புலன்கள் எளிதாய்
செழிக்குதே அறிவும் பெரிதாய்
உயிர்க்குதே ஆக்கத்திறனும் உடனாய்

வளர்ந்து பரவி வாழுதே
எம்தமிழும் உந்தன் பாமுகத்தால்
நிகழ்வில் காளமாடுவோரின் உமிழ் திறத்தால்

தளிர்களும் வளரத் தருகின்றாய் தளம்
தன்னம்பிக்கை உயர
இடுகின்றாய் உரம்

இளசுகளும் பழசுகளும் இயங்குவதற்கு இடுகின்றாய் தளம்

ஏந்தி நிற்கின்றோம்
நாமும் நன்றிக்கலம்

நிகழ்வுகள் ஆக்கும் உந்திறன்
புகழைப் பூசியே செல்லும்
வாழ்த்துத் தகவலையே
சொல்லும்

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading