மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

சக்தி சிறினிசங்கர்
சுற்றுப் இந்தப் பூமி
சுத்தம் கெட்டுப் போக
பற்றும் இல்லா மாந்தர்
படைகள் பொங்கி எழவே
முற்றும் போரில் முழுதாய்
மூச்சும் திணறிப் போகும்
அற்றுப் போக அசுத்தம்
அப்போ தானே சுகமே!
வானும் வளமும் குன்ற
வகையைத் தேடும் வன்மம்
மீனும் கடலில் நஞ்சாய்
மிதக்கும் உயிராய்க் கிடக்கும்
கானும் கழிவு நிறைந்து
காண்போம் அன்றோ நாளும்
நானும் நீயும் உணர்ந்தால்
நலமாய் வாழ நடப்போம்!

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading