“மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு “

ரஜனி அன்ரன் ( B.A) மாசற்ற உலகே…. 09.04.2026

ஆரோக்கியமென்பது அழகிய பயணம்
சுற்றுச்சூழல் சுவாசிக்கும் காற்று
சிந்திடும் எண்ணம் உண்ணிடும்உணவு
அத்தனையும் தூய்மையாய் இருந்தால்
நோயற்ற வாழ்வும் கிட்டும்
மாசற்ற உலகையும் கட்டியெழுப்பலாம் !

கழிவுகள் கொட்டாத நதிகளும்
கலப்படம் இல்லா உணவுகளும்
நெகிழிகள் இல்லா வாழ்வும்
நச்சுப்புகை இல்லாக் காற்றும்
நோயற்ற வாழ்விற்கு உறுதுணை
மாசற்ற உலகிற்கு மாண்பு
வருங்காலத் தலைமுறைக்கு இதுவேபரிசு !

காற்றினில் நஞ்சு நீரினிற்கழிவு
இதுவே மனிதகுலத்தின் ஆரோக்கிய அழிவு
ஆரோக்கியமும் பசுமையும் அனைவருக்கும் கிடைக்கட்டும்
மாசற்ற உலகைப் படைப்போம்
நோயற்ற வாழ்வினை அடைவோம்
மாசற்ற வாழ்வே நோயற்ற வாழ்வின் திறவுகோல் !

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading