முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மாறாத சுவடுகள்

ரஜனி அன்ரன்

“ மாறாத சுவடுகள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16.05.2024

இரத்த வெள்ளத்தில் மூழ்கிய மண்
இனத்திற்காகவே ஈகையான பூமி
நந்திக்கடலும் செங்கடலான தருணம்
பலியாக்கப்பட்ட உறவுகள்
வலியினால் துடித்த உயிர்கள்
துயரம் சொல்லத் தவிக்கிறது மொழி
விழிகளில் வழிகிறது கண்ணீர்
முள்ளி வாய்க்காலே ஒரு துயரகாவியம் !

போரின் கொடுமை பசிபட்டினி
அழிவுகளும் அநியாய தாக்குதல்களும்
ஆறாத காயங்கள் மாறாத சுவடுகள்
நீறுபூத்த நெருப்பாக நெஞ்சமதில் இருப்பாக
ஆழ்மனதில் புதைந்த ஆறாத்துயரம்
ஆழமாய் புதைந்த அத்தியாயம் !

வானம் கூட சோகத்தைப் பொழிய
பாட மறந்தன பறவைகளும்
பொறுமையை இழந்தாள் பூமித்தாயும்
வீரர்களின் தியாகமும்
வலிசுமந்த மக்களின் துயரமும்
காயப்பட்ட மனங்களும் ரணங்களும்
நினைவுகளில் எழுந்த தீராத் துயரம்
அத்தனையும் மாறாத சுவடுகளே !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading