முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மாற்றம்

ஜெயம் தங்கராஜா

கவி 739

மாற்றம்

மூளையை மூலதனமாக்கு மாற்றங்கள் நிகழும்
கோழையாய் இருந்திடின் வாழ்க்கையே இகழும்
மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை
மாற்றிக்கொண்டால் உன்னை காலத்திற்கேற்ற பிள்ளை

பழைய பல்லவியை எப்போதும் பாடுவதா
தலைப்புச்செய்தியாக்கி அலுக்காமல் இன்றும் ஓட்டுவதா
விந்தையான உலகத்தில் குந்தியே இருந்துகொண்டு
சிந்தையினை மாற்றாமல் எவ்வவளவுகாலத்திற்குத்தான் என்று

காலத்தேவை அறிந்து கருத்துக்களும் மாறும்
வாழத்தெரிந்தவர்கள் அடைவார்கள் இதனால் பேறும்
பழகிய வாழ்வியலிலிருந்து புதிதான மாற்றம்
உலகிலே இதுதான் வாழ்க்கைக்கான தேற்றம்

பழையன கழிதலும் புதியன புகுதலும்
கலையன்றோ வாழ்வு கற்றலும் தெளிதலும்
இல்லை மாறமாட்டேன் என்பது மடமை
கல்லாக வாழ்க்கையை கழிப்பது கொடுமை

புதிய வருகைகள் தவிர்க்க இயலாதது
இதிலே முரண்படின் வாழ்க்கையும் செல்லாதது
காலத்தின் தேவைகருதி சிந்தனையில் மாற்றம்
ஞாலத்தில் தந்துவிடும் அதுவே முன்னேற்றம்

ஜெயம்
04-09-2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading