17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
ரஜனி அன்ரன்
“ வெம்மையின் கொடுமை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 21.07.2022
கோடையின் வெம்மை இங்கு
சோடை போக வைக்குது எமை
வாட்டி எடுக்குது வதையும் செய்யுது
வரலாறு காணாத அனலையும் கக்குது
அனல் காற்று வீசி பசுமையைத் தின்னுது
ஐரோப்பிய நாடுகளையும் அவலமாக்குது
வெம்மையின் கொடுமை வேதனை தருகுது !
உச்சி வெய்யில் சுட்டெரிக்க
குச்சி ஐஸ்சைத் தேடுது நாவும்
உச்சந்தலையும் விறைத்துவிட
உக்கிரமாய் எரிக்கிறான் உதயசூரியனும்
வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் கொட்ட
விபரிக்க முடியாத புழுக்கம்
வீட்டுக்குள்ளே மக்களும் முடக்கம்
வெம்மையின் கொடுமை தாங்க முடியல !
அனல் வெப்பத்தில் பொசுங்குது பயிர்களும்
பட்சிகளும் ஒதுங்குது நிழல்களைத் தேடி
மக்களும் ஆற்றங்கரைகளை நோக்கி விரைந்தபடி
வெய்யில் காலத்து விடுமுறை
வியர்வையில் தோய்ந்தபடி விரயமாக
தருக்களும் இங்கு அசையாதபடி
மெளன அஞ்சலி செய்யுதே !
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...