நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.07.23
கவி இலக்கம்-278
விடுமுறை வந்தாலே

விடுமுறை வந்தாலே
வீட்டுக்கு வீடு குதூகலக்
கொண்டாட்டம்

அன்றாடம் வேலை
செய்து செய்து உழைத்த
களைப்பில் சோர்வாட்டம்

ஓய்வு எடுப்போமென்றாலும்
சிலருக்கு ஏக்கமுடன்
திண்டாட்டம்

பிள்ளைகளிற்கோ விடுமுறைத்
தெரிவு சந்தோஷக் களிப்பாட்டம்

தந்தைக்கோ முழுசாட்டம்
தன் அப்பா கண் அறுவைச்
சிகிச்சைக்குப் பணம் கேட்டது
தவிப்பாட்டம்

விடுமுறைக்குப் பிள்ளைகளை
அனுப்பிவிட்டு விரைந்து
செல்கிறது இன்னோர் வேலை
தேடி மரத்துப் போன கால்கள்

எட்டி எட்டி நடக்கிறதே
உயிரைக் கையில் பிடித்தபடி
மனப் போராட்டமுடன் .

Nada Mohan
Author: Nada Mohan