விழித்தெழு மனிதா!!

நகுலா சிவநாதன்

விழித்தெழு மனிதா!!

விழித்தெழு மனிதா வித்தகத் திறனாய்
வினைத்திறன் கொண்டு விரைந்துவா
கழிந்தது காலம் கனிந்தது உறவினில்
கவிழ்ந்தது படகும் கார்த்திகை மாதம்
எழிந்திட முனைந்து எடுத்திடு கருவியை
ஏற்றமாய் வானும் இறைந்திடும் வரமாய்
உழுதிடு வயலை உணவிடு பாரில்
உறங்கிடா வாழ்வை உறுதியாய் கொள்ளு!

புதுயுக மனிதன் புனிதனாய் எழுக
பூத்திடும் மலர்கள் சாட்சியாய் பகிர
பதியது போதும் பலமிகு மனிதா
படைப்பது உனது வேலையாய் கொள்க
நிதியது கிடைக்க நிம்மதி ஏற்று
நித்தமும் உழைப்பே முதலாய் தீட்டு

நகுலா சிவநாதன் 1836

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading