வெற்றி

செல்வி நித்த்யானந்தன்
வெற்றி

தோல்வியின் எதிராய்
வருவதும்
மானிடரின் இலக்கு
என்பதும்
இரண்டும் இரண்டற
இருப்பதும்
இருந்தும் வெற்றி
சிறப்பு

முயற்சி என்றும்
படிப்பினை ஊட்டும்
முயன்று சென்றால்
வெல்வது நிச்சயம்

தோல்வி கண்டு
வருந்திடல் ஆகா
தோற்றும் வெற்றி
இறுதியிலா உறுதி

வெற்றி என்றுமே
பெருமை
வெல்லும் நிலையும்
உவகை
தோல்வி சிலருக்கு
பொறாமை
தோழமை கொண்டு
வெல்வதும் வெற்றியே

செல்வி நித்த்யானந்தன்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading