Selvi Nithianandan

விடிவு
நாளை என்பது விடிவே
நாளும் நடக்கும் முடிவே
நாட்டு நிலைமை எதுவோ
நல்ல செய்தி வருமோ

அச்சம் கொண்ட வாழ்வு
ஆகாரம் இல்லா சோர்வு
அறிய முடியாத் தெளிவு
அதுவே இப்போ உணர்வு

வீட்டுக்குள்ளே முடங்கிய சரிதம்
வீதிக்கு வரவே இப்போ துரிதம்
வீணாய் தானே இறக்கும் வீதம்
வீராப்பாய் மறைக்கும் பெருமிதம்

நாளை என்பது யாரதுகையில்
வேளை முடிந்தால் போகணும் பிடியில்
காலை மாலை வந்திடும் நிலையில்
தோழமை போல காத்திடு உலகில்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

    Continue reading