” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தமிழர் கலையாம் தமிழிசை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.02.2023

தமிழுக்குப் பெருமை சேர்ப்பது தமிழிசை
தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை
இயல் இசை நாடகமாகி முத்தமிழாய்
இசையும் கூத்தும் இணைந்து இசைத்தமிழாய்
இரண்டறக் கலந்தது வாழ்வோடு தமிழிசை !

ஆதியான தமிழிசைக்கு ஆதாரமாய்
இலக்கணம் வகுத்தது அகத்தியம்
தொன்மைக்கு சான்றானது தொல்காப்பியம்
புத்துயிரானது பக்திப்பனுவல்கள் பாசுரங்கள்
கலங்கரை விளக்கானது சிலப்பதிகாரம்
மறுமலர்ச்சியைச் செய்தாரே பாரதியாரும் !

இசையைத் தொழிலாக்கி
தொழிலுக்கு இசைக் கருவியானது பறை
பொழுதை இன்பமாய்ப் போக்க
யாழை இசைத்து மக்கள் மகிழ
தமிழிசைக்கு இலக்கணம் தந்தது யாழ்நூல் !

முத்தமிழின் நடுநாயகமாம் தமிழிசை
தாலாட்டோடு தொடங்கி நீராட்டு வரை
தமிழர் வாழ்வோடு பயணித்து
தமிழிசையாகித் தரணியை ஆளுது
தரணியெங்கும் தமிழிசை முழங்கட்டும்
மண்வளக் கலைகளும் மகுடம் சூடட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan