Jamunamalar Indrakumar

நீர்க்குமிழி

தண்ணீ ருள்ளே பள்ளம் போடும்
பள்ளம் மேலே வள்ள மாகும்
வளியை சுமந்து வாழ்வைத் தொடக்கும்
வட்ட வடிவில் வரைந்து செல்லும்
வரைந்த கணமே வாழ்வை முடிக்கும்
வாழ்வின் உண்மை பலதை
உணர்த்தும்
பிறப்பும் இறப்பும் இயல்பு
என்றிடும்
நிலையாப் பண்பை சிறப்பாய் கூறும்
பூமிப் பந்தின் வடிவம் எடுத்து
நிறமும் மணமும் சுவையும்
கொள்ளா
உருவம் தாங்கும் நீரில் மட்டும்
பெயரும் உண்டு நீர்க் குமிழியாய்
பட்ட மரத்தில் பூக்கத் தொடங்கும்
விட்ட மழையில் முகிழ்த்துத்
தொங்கும்
றோஜா முள்ளில் பூத்துக் குலுங்கும்
மழைத்துளி அவளே மொட்டாய் முகிழ்வாள்
குமிழி போலே குழிந்து இருப்பாள்
கதிரவன் கடுப்பில் கரந்து
செல்வாள்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading