மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சித்திரை வந்தாலே …
பருவத்தின் எழில் மிடுக்கு பசுமையின் தனித் தோப்பு
பகலெனும் ஒளி வீச்சு
படர்கின்ற சித்திரையில்
பாரெங்கும் விழாக்கோலம்
ஊரெங்கும் கொண்டாட்டம்
புள்ளினங்கள் இசைபாடும்
பூவினங்கள் மலர்வாகும்
வண்டினத்து ரீங்காரம் வயல்தோப்பு விளைவாகும்
இயற்கையே கருத்தரிக்கும்
சித்திரையின் செல்வாக்கு
சிறப்பான வரவேற்பு
தமிழர் புத்தாண்டே
தைரியத்தின் பேரழகு
மெல்ல ஒளி நிறைத்து
மேதினியை வசமாக்கும்
சித்திரை வந்தாலே
சித்தமும் பிரகாசம்
குளிரின் தடை விலத்தி
குதூகலிக்கும் உல்லாசம்!
இயற்கைப் பேரழகின்
இங்கிதத்தின் வரவேற்பு
காலத்தின் முகவரியாய் கனிகின்ற கலகலப்பு!
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading