வர்ண வர்ணப்பூக்கள்

கவிஎழுதுகிறேன் வர்ண வர்ண பூக்களே வர்ண வர்ண பூக்கள் மலர்களில் பலவிதம் மண்ணிலே புதுவிதம் இயற்கை செயற்கை இணைந்த பூக்கள் இறைவன்...

Continue reading

அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

Kavikco Parama Vsvalingam

வளர்ந்த குழந்ழைதகள் தாமே….

பிறக்கின்ற குழந்தை அழுகின்றது – ஏன்
பிறந்தோம் என்றா நினைக்கின்றது
தரணியில் பிறந்த அக் குழந்தை – தன்
வரவினை உறவிற்கு சொல்கின்றது.

அடுத்தது என்ன என்பதனை
அதுவாய்த்தானே நினைக்கின்றது
எடுத்தடி வைக்கும் முன்னாலே
ஏதோ எதுவோ தடுக்கின்றது.

கருத்துக்கள் என்னும் கையேட்டை
பொறுப்புடன்தானே திணிக்கின்றோம் – அது
வெறுப்பினைக் காட்ட முடியாமல்
வேண்டுமென்றே சிரிக்கின்றது.

பிறப்பினில் பேதம் கிடையாது – அதன்
பெமைகள் எவருக்கும் புரியாது
வல்லார் மட்டுமே பிறக்pன்றார் – அது
அல்லார் இன்னும் பிறக்கவில்லை.

வளர்;ந்த குழந்தைகளே – மண்ணில்
வாழும் தெய்வங்களே
தொட்டிலில் குழந்தைகள் தூங்குவதில்லை
சிந்தித்தபடியே சிரிக்கின்றன.

சந்திக்கும் அனைத்தையுமே
சவாலாய் எண்ணுங்கள் – அந்த
சாதனை ஏட்டினை சந்ததிக்காய்
எழுதிடச் செய்யுங்கள்.

உங்களை நம்புங்கள்
பிள்ளைகள் உங்கள் அங்கங்கள்
பெருமை கொள்ளுங்கள்
பேதமை தள்ளுங்கள்.

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading