பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
நேரம்
தேர்ந்த சாத்திரியாய்
திகழும் ஜயரிடம்
நேர காலம்பார்த்து
அழைப்பு அனுப்பும்
கல்யாணம்
மாப்பிள்ளை வீட்டுக்கு
தோழன் போய்
பெண்பிள்ளை வீட்டுக்கு
தோழி போய்
பால்அறுகு வைத்து
மணவறைக்கு அழைத்துவர
நாள் நேரம் ஆகுதென்று
யார் சொன்னாலும்
கேளார்
வீடிஓ காரன்
வைச்சதே சட்டம்
தாலி கட்டும் வேளையிலும்
தடுப்பான் பொறு என்று
வீடியோ பிடிப்புக்கு
சேர்ந்தோடி நடக்கும்
திருமணம்
ஓர் ஈர் வருடத்துள்
திருமண முறிவு
பிரிவு ஊர் எல்லாம் பேச்சாகும்.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading