சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பிஞ்சினை வருத்தாதே

சர்வேஸ்வரி சிவருபன்

பிஞ்சினை வருத்தாதே

கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //

வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //

பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //

கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //

பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //

சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //

ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //

காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //

சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //

சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //

அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //

வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //

கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //

பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan