11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
ஷாமினி துவாரகன்
அழைக்கின்றேன் மகளை
கோவில் சென்று வர
கேட்கிறாள் காரணம்
எதற்கு தான் என்று…..
சூரவதை பார்க்க
சீக்கிரம் கிளம்பு
பாணக்கம் வாங்கி வர
பாத்திரமும் எடு…….
தேவர் குலம் காத்த
வேலன் புகழ் எல்லாம்
பாட்டி சொல்லக் கேட்டதுண்டு
பார்க்க வேண்டும் நேரிலதை ……
பட்டு பாவாடை உடன்
சாந்துப் பொட்டும் வைத்து
பின்னிய சடையிடை
மல்லிகைப் பூவும் வைத்து ……
சட்டென்று வந்து நின்ற
செல்லமகள் முகம் பார்த்து
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன் .
அசுரனை அழித்த
அந்தக் கதை மட்டுமல்ல
அந்நிய நாட்டிலும்
அழியாது பேணி வரும்
கலாசாரம் எண்ணி
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன்.
-ஷாமினி துவாரகன்-
12.11.2024
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...