ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இதுதான் அது அதுதான் எது

கவிதை 765
ஜெயம் தங்கராஜா
மண்ணுலகில் எவருடனும் பழகுவதொன்று
என்னையும் உன்னையும் தெரியவைத்திடுமொன்று
நேரமும் இதற்குள் அடங்கியே இருக்கும்
கெடும் பாடும்படும் மீண்டும் துளிர்க்கும்

இது மாற்றக்கூடியது மாறக்கூடியது
இது சுவர்மேல் கிறுக்கிய சித்திரம்
இன்றுவரை தெரியவில்லை அதனது இரகசியம்
இதை தக்கவைத்துக்கொள்ளவே இந்த அவசரம்

உணவுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு
பணத்திற்கு இதனுடன் உறவே உண்டு
நீளம் ஆழம் இவைகளைக் கொண்டு
இதுவும்கூட கலைகளில் ஒன்றாய் இன்று

முன்னோக்கியும் போகும் பின்னோக்கியும் வரும்
களிக்கும் சிரிக்கும் வலிக்கும் அழும்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading