திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

உழைப்பின் மாண்பு

நேவிஸ் பிலிப் கவி இல (432)

வைகறை விடியலும்
வையத்தில் கரை புரளும் உற்சாகமும்
கடலலை போல் பொங்கிடும்
இந்நாள்

உழைப்பின் பெருமையை
உருவாக்கும் கரங்களை
போற்றிப் பெருமைப் படுத்தும்
உழைப்பாளர் தினம்

உடலுக்கு உற்சாகம் உழைப்பு
அதுவே மனித மாண்பின் சிறப்பு
எத்தொழில் ஆற்றிடினும்
அத் தொழிலே தெய்வமென
போற்றிப் புகழ்ந்திடுவோம்

செய்யும் பணியில் பணிவும்
பகிர்ந்து வாழும் பண்பும் வேண்டும்
அடிமைத் தனங்கள்அடக்கு முறைகள் ஒழிய
நொறுங்குண்ட மனங்கள் மகிழ வேண்டும்

உழைப்பைக் கைவிடாதே
தோல்வி கண்டு துவண்டிடாதே
ஓடும்வரை ஓடிக் கொண்டே இரு
முயன்றால் தொடு வானம் கூட
தொட்டு விடும் தூரமே

நன்றி வணக்கம் .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading