திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஈகையின் சுடருக்கு ஈன்ற தமிழ் வணக்கம்..!!

வியாழன் கவி 2210!!

ஈகையின் சுடருக்கு
ஈன்ற தமிழ் வணக்கம்..!!

தியாகத்தின் வழி நினதே
திண்மமாய் நின்ற மெழுகே
நீ திரவமாய் கரைந்தனையோ
நல்லூரான் வீதியிலே
இரு ஆறு நாட்கள் கிடக்கையில்
உணவும் நீரும் விடுத்து
ஈழ விடுதலை வேண்டி
உருகினையோ பார்த்தீபா..

பாதகர் தம் நிலையறிந்து
பற்றினையும் நீ துறந்து
ஐந்தாய்க் கோரிக்கைகள்
அடுக்கியே படுக்கையில்
பார்த்திருந்த விழிகள் செந்நீர்
சிந்தியதை மறப்போமோ
சுதந்திர தமிழீழம் வேண்டு
சுகமதனை இழந்தவனே
உன் தியாகம் மறந்திட
நாம் மாக்கள் இல்லையே..!!
சிவதர்சனி இராகவன்
18/9/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading