” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முத்தேவியர் அருள்

நகுலா சிவநாதன்

முத்தேவியர் அருள்

கல்வி வீரம் செல்வம் என்று
கனிவாய்க் கொடுக்கும் முத்தேவியர்
பல்கிப் பெருகும் அருளாலே
பயனும் உண்டு பாரினிலே
செல்வம் செழித்து வளர்ந்திடவே
செருக்கு இல்லா வாழ்வமைய
நல்ல கல்வி நாம் பெற்று
நன்றே வாழ்வோம் வீரத்துடன்

நவமாய்ப் பெருகும் நல்வாழ்வில்
நன்மை யுண்டே உலகினிலே
தவமாய் யான பொழுதுகளும்
தவிப்பே யின்றிப் பெருகட்டும்
யுகமாய் அன்பு பெருகிவிட்டால்
யுத்தம் மொன்றும் வராதென்பர்
நித்தம் கடவுளை வணங்கினின்றால்
நினைவு நல்லது கிடைத்திடுமே

தேவியர் அருளும் நன்னாளில்
தேசம் யாவும் மகிழ்வேந்த
ஞாயிறு உதித்து நலம்காக்க
நவராத்திரியும் வளம் காக்கும்

நகுலா சிவநாதன் 1822

Author: