நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தங்கமே ௨ந்தனுக்கு

Vajeetha Mohamed முகம் தெரியா முகவரியே
முகில் தவழும் வான்மதியே
கோர்த்து வைத்த மாணிக்கமே
சேர்த்து இணைந்த தேனழுதே

வென்பாய் சிரிப்பு சிதறிவிழும்
வெறுநடை செழிப்பு தாண்டிவ௫ம்
பால்மனம் மாறா பவளம் நீ
பரிமாண பாசத்தின் ௨றவும் நீ

தூக்கி அணைக்கும் ௨ணர்வுக்குள்
துயிலாநினைவு என்னுயி௫க்குள்
இறையுணர்வும் அறநெறியும்
தரித்த நாள் அகவையிரண்டு

தங்கமே தாலாட்டி வாழ்த்துகின்றேன்
தத்தித் தடுமாறி பேசும் ௨ம்மழகு
தரணியே ஓர் மொழிக் கவிதையிழகு
வாழ்க இறையாசி பெற்று என்றுமே

Author: