எனது மனது

கவி இலக்கம் :28
எனது மனது.

எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று

இந்த உலகில்
நாம் படைக்ப்பட்டது
ஏன்?

நம்மைப் படைத்தது
யார்?
எப்படிப்
படைத்தார்கள்?

நம்மை
படைத்தவர்களுக்கு
நம்மால்
என்ன பயன்?

ஒரு வேளை
அவர்களின்
தேவைக்காக.,

நம்மை அவர்கள்
படைத்தது
அவர்களின்,

தேவையை
நிறைவேற்றிக்
கொள்வதற்க்காக
போலும்.

அவர்களது
தேவைகள் எவை?
என்று தான்
தெரியவில்லை!

இப்படியும் இருக்கலாம்
நம்மைப் படைத்து,

நம் மூலம்
எப்படிப் பட்ட
குணங்களை,

உயிர்களுக்குக்
கொடுக்கக் கூடாது
என்று பரிசோதிப்பது
போல் தெரிகிறது.

விண்ணவன் – குமுழமுனை.

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading