நினைவாயிரம் நிழலாடுதே!

நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!

நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம் கனவானதே!
உருவினில் வந்துதித்த மகளாலே!

டாக்டர் பட்டமும் கிடைத்திட்ட கணம்
நினைவுகளில் இன்னமும் நிழலாடுதே!
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியில்
பாராட்டுப்பெற்ற கணம் மகிழ்தது தாயுள்ளம்
விதத்தது கல்வியின் விருட்சத்தை கண்டு!

எத்தனை நாட்கள் கனவிருந்த உயர்படிப்பு
அத்தனையும் நினைவானதே இன்று!
பேராரியர்கள் வாழ்த்த பட்டமும் உச்சரிக்க
பாராட்டுப் பெற்றுயர்ந்த வேளை
உகுத்ததே! ஆனந்தக் கண்ணீர்
உவகை கொண்டோம் குடும்பமாய்

நகுலா சிவநாதன் 1840

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading