“கனவுப் பயணம்”

நேவிஸ் பிலிப் கவி இல (604)

காட்டு வழிப் பயணமது
கரடு முரடான
ஒற்றையடிப் பாதையிலே…
தனித்து நடக்கிறேன்

தனிமை நெஞ்சில் கொஞ்சம்
திகில் ஊட்ட மிரள்கின்றேன்
ஆளரவம் ஏதுமில்லை
அக்கம் பக்கம் யாருமில்லை

திடீரென என்னருகே
கழுகொன்று பறந்து வந்து
சிறகால் எனை அணைத்து
வான் வெளியில் தூக்கிச் சென்று

கடலாறு மலை கடந்து
பசுஞ்சோலைதனை அடைந்து
பக்குவமாய் இறக்கிவிட
பால்நிலா ஒளியினிலே
சொர்க்க பூமி நான்கண்டேன்

சுற்றிச் சுழன்ற பார்வையிலே என்
அன்னை தந்தை அக்காக்கள்
அண்ணன் தம்பி யாவருமே
அன்போடெனை அணைத்திடவே
அம்மாவென்றலறியே கண்விழித்தேன்
கனவென திகைத்தேன்.
நன்றி ….”…

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading