வசந்தம் ஒரு வரவு

நகுலா சிவநாதன்
வசந்தம் ஒரு வரவு

வசந்தம் ஒரு வண்ணம்
வாழ்வே புதுவெண்ணம்
சுகந்தம் தருமே சுகம்
சுடராய் எரியும் கதிரினொளி

தென்றல் தவழும் இன்பம்
தேனாய் இருக்கும் குருவிரீங்காரம்
மன்றம் மகிழும் மலர்கள்
மனிதா இதை நீ உணர்

மலர்கள் மலரும் பாதை
மகிழ்வே துளிர்க்கும் மனதும்
புலரும் எங்கள் புதுவாழ்வும்
புதுமை படைக்கும் புதுக்கனவாய்

வசந்தம் சொல்வது வரவு
வாழ்ந்து மடிவது இயற்கை
சுகந்தம் தந்திடும்காலம்
துணிவாய் அனுபவி தினமும்

நகுலா சிவநாதன் 1857

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading