கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்

விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய் வாழ்வு

நிலையில்லை என்றுணர்ந்தும்
நிச்சயமாய் எண்ணி -நிதம்
கபட நாடகத்துள் வெற்றி கொள்ள
சூட்சுமங்கள் வகுப்போம்

வள்ளலெனச் சொல்வோம்
வகைவகையா்ச் சுருட்டி -பிறர்
நலிவடையும் நொடியினில் -எம்
பெட்டகங்கள நிறைப்போம்

பாவச்சுமை காவி-அங்கு
நிலைபெறுதலுக்கா ஓட்டம்
புரிந்தெழுந்து அவை நடந்து
அன்பினிலே நிலைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan