மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மாறியதே வாழ்க்கை

கவிதை 810 பகுதி 1

விடியும் முன்பே விழித்துக்கொண்டு
விரைந்து ஓடும் மானுட வாழ்வு
நேரம் போட்டு கடிகாரதின் கட்டளை
அதற்கு அடங்கி கால்கள் நடைபோடும்

அலாரம் கத்தி காலையில் எழுப்பும்
கண்ட கனவும் இடையிலே நிற்கும்
பணம் தேடி ஓடும் கால்கள்
இதுவென வாழ்க்கை கரைந்திடும் நாட்கள்

இன்பம் மறந்து உழைப்பே கதியாக
அன்பின் மொழிகளும் சுருக்க செய்தியாக
செயற்கையாக இன்று சிரிப்பும் மாறியதே
அருகிருக்கும் உயிரான உறவுகளும் அந்நியமாகியதே

ஜெயம்
15-07-2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading