தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-26.01.2023
கவி இலக்கம்-1630
அப்பாவை தேடுகிறேன்
———————————-
என் அன்புள்ள அப்பாவே
உம்மோடு வாழ்ந்த நாட்களை
திரும்பி பார்க்கிறேன்
உங்கள் பெயரை சொல்லி பார்த்தால்
என்னுள் ஒரு சுகம்
எம்மை தவிக்கவிட்டு தனிமையாக்கி
நெடுந்தூரம் பயணமாகி விட்டீர்கள்
எனது நலனுக்காக பட்ட துன்பங்கள்
உங்கள் நினைவே சொல் செயலில்
எம்மோடு வாழ்ந்து மறைந்தீர்கள்
ஒளியாயிருந்த நீங்கள் இருளாகி விட்டீகளே
32 வருட காலமாக வீசிய வசந்தமே
கெதியில் பிரியவா கை கோர்த்தீர்கள்
அன்று 28.01 அதிகாலை பொழுதில்
ஆண்டவன் எடுத்துக் கொண்ட மர்மம் என்ன
ஓ மரணத்தின் முடிவே இறைவனின் தீர்ப்பே
எம் உள்ளமதில் நினைவில் என்றும்
உம் பாதச் சுவடுகளை கண்ணீரால் அஞ்சலிக்கிறேன்
உங்களை தேடியே பார்க்கிறேன்
பல இரவுகளில் கூட நினைவில் வருவீர்கள்
நீங்கள் எமக்காகவே வாழ்வீர்கள்
எமதருகில் எம்முடன் வாழ்ந்து உதவுகிறீர்கள்
உங்களது 19 வருட நிறைவிற்கு என்
கறுப்புக் கவிதை பாத காணிக்கை
பிள்ளைகளும் தேடிக் கொண்டேயுள்ளனர்
கல்லறைக்கு ஒளி ஏற்றி அஞ்சலிக்கிறோம்
ஆண்டவன் சன்னிதியில் இளைப்பாறுங்கள்
ஆன்ம ஈடேற்றம் பெற ஆண்டவன் அருள் புரிவாராக

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading