Selvi Nithianandan

இப்போதெல்லாம் (604)

மனிதம் இப்போ செத்தும் போச்சு
மாக்கள் போன்று மாறியும் ஆச்சு
மகிழ்ச்சி எல்லாம் மழுங்கி போச்சு
மல்லுக் கட்டும் காலமாய் ஆச்சு

பணம் என்ற குறிக்கோள் ஒன்று
குணம் மாறி பிணமாய் நின்று
தனம் நிலமென பறிப்பது இன்று
மனம் குறிகி மதியும் வென்று

நாகரீக போர்வைக்குள் நசுங்கிய நினைவு
நாலாபுரமும் சண்டை அடிபட்டு சாவு
நாளை எதுவென தெரியாத வாழ்வு
நம்மிடம் இருப்பதை பகிர்ந்தே வாழு.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading