Selvi Nithianandan

என்னத்தை சொல்ல

ஆதிமனிதன் வாழும்போது
எம்மைகூட மறந்தினம்
ஜாதிமத பேதம்போல
நம்மைக்கூட பார்க்கினம்

ஆடைக்கேற்ற வண்ணமாய்
அங்காடியில் வாங்கினம்
கோடையென மாரியென
கோலாகலம் தேடினம்

பழமை மறந்துதானே
பலபெயரு சொல்லினம்
பணமதிகம் என்பதாலே
பந்தாகாட்டி நிக்கினம்

பகட்டு வாழ்வாலே
புதியதாய் அடுக்கினம்
கோயில் என்றாலே
வெளியும் கழட்டினம்

வரலாற்றில் எம்மை
ஜோடியாக வைக்கினம்
சோடி அறுந்திட்டா
குப்பைக்குள் வீசினமே.

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading