Vajeetha Mohamed

தவிப்பு

தோண்டாத குழிக்குள்ளே
தோற்காத அலைகரைக்குள்ளே

ஓயாது சுழலும் பூமி
ஓர்கணமும் சலிக்காத சாமி

ஐம்பூதச் சுழற்சி தினம்
ஐயமின்றிய நொகிழ்ச்சி த௫ம்

பசியோடு பறக்கும் பறவை
படைத்தவனின் கொடை நிறுவை

க௫வறை தரிக்கும் குழந்தை
கடவுளின் நொறியில் மடந்தை

இயற்கையின் தவிப்பு அழிவு
இறைவன் மாற்றுவான் தெளிவு

இரவை விரட்டும் பகலும்
இறப்பு பிறப்பு செயலும்

தவிப்பின் விட்டம் புரிவாய்
தவிப்பின்றி ஏதுமில்லை தெரிவாய்

ஆறறிவு மனிதன் மட்டும்
ஆறுதலின்றி தவிப்பே வாட்டும்

தவித்து தவித்து வாழ்கையிழந்தோம்
தனியே ஒ௫நாள் ௨யிரின்றிபடுப்போம்

தனித்துவாழ்ந்த போதும்
தன்நம்பிக்கையுடன் வாழும்
ஐந்தறிவு ௨யிர்கள்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading