பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக் கவருகின்ற காட்சி
பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும் காட்சி
பட்டப்பகலில் வெட்டவெளியில்
சுட்டெரிக்கும் சூரியக்கதிர்கள்
தகதகவென மிருதங்க
வாய்க்காலில் வழிந்தோடும்
நீரில் கால்கள் நனைக்க ஜில்லென்ற குளிரில் தேகம் புல்லரிக்க……..
பயணம் தொடர்கிறது
தேசம் நோக்கி!
காலம் கடந்த பாதையில்
நினைவுகளின் சுவடுகள்
நிஜத்தை வரவழைக்க
நிழலாய் மனத்தில் ஊஞ்சலாடும்
வண்ணக் கனவுகள்…….
ஒரே கூட்டில்….
ஒரே விறாந்தையில்….
ஒரே சமையல்……
ஒரே கும்மாளம்…..
மறைந்துபோன உறவுகள் மனத்தினை நிறைக்க
விழிகள் மறுத்தன தூக்கத்தை
பயணிக்கின்றேன் நான் தொலைதூரம்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு நன்றி.
திரு.திருமதி. நடா மோகனுக்கு நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்!