” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தடமது பதித்தெழும் தனித்துவம்

சக்தி சிறினிசங்கர்

எண்சீர் விருத்தம்
சீர்வரையறை: விளம் மா விளம் மா/விளம் மா விளம் மா
அகவையில் உயர்ந்தே அரும்பெரும் சேவை
அலையினில் ஓசை அவனியில் கேட்க
மகத்துவம் கண்ட மாபெரூம் காட்சி
மனத்தினை நிறைத்து மலர்ந்தது பெருமை
புகலிட வாழ்வில் புதியதோர் சரிதம்
பூமியில் பரந்து பூத்தது தானே
நிகரிலாக் களமே நிமிர்ந்தது தானே
நித்தமும் படையல் நீளுது தானே!

ஆக்கமும் எழுத அணைப்பரே இவர்கள்
அருந்தமிழழ்ச் சிறார்கள் அகத்தினில் நிறைந்து
ஊக்கமும் கொடுத்தே உந்துதல் செய்வர்
உறுதுணை ஆகி உயர்த்திட உழைப்பர்
நோக்கமும் கொண்டு நொடிதனைக் காத்து
நோவையும் தாங்கி நின்றனர் சோடி
பாக்களில் போற்றிப் பாடுவோம் நாமும்
பாமுகம் தன்னை வாழ்த்தியே நிற்போம்!

தடமது பதித்துத் தனித்துவம் கண்டு
தளர்ந்திடா சேவை தரணியில் ஆற்றி
அடம்பனைப் போலே அகலவும் விரிந்து
அருந்தமிழ்த் தொண்டு அதிசயம் ஆக
இடர்களை வென்று இடைவிடா முயற்சி
இளையவர் கரங்கள் இணைந்திட வைத்துக்
கடந்தது அகவை கடமையில் என்றும்
கண்ணியம் காத்த காவலர் வாழ்க!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள்!
திரு.திருமதி.நடா மோகனுக்கு நன்றி!
அனைத்துக் கவிப்படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan