நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026

சிவதர்சனி இரா
நேசமாகும் வசந்தம்..!!

மெல்லப் பன்னீராய்
மழைத் தூறல் இடும்
மேகம் மீது வெண்மை
சாமரம் வீசும்
வண்ணமாய்ப் பூவினம்
எங்கும் உயிர்க்கும்
வாசனை வீசியே
வரவேற்று மகிழும்
மண்ணின் மீதோ
மலர்வுகள் பலவாகும்
மஞ்சளாய் மாயத்துகள்
சொரிந்தே கிடக்கும்
ஒளியின் கதிர்கள்
விரைந்தே நிரப்பும்
ஓயாது தென்றலும்
நடம் புரிந்து நிற்கும்
உடலில் வெம்மை
உணர்வை ஆட்டிவைக்க
புலரும் பொழுதுகள்
வசந்தத்தின் மடி தவழும்..
சிவதர்சனி இரா

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading