இயற்கைவரமே இதுவும்கொடையே

VajeethaMohamed அ௫ள்பெற்ற ஆனந்தம் அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம் திரிவுகொள்ளும் ௨ம்செயல் திவ்வியம் அள்ளும் அமல் விந்தையோடு விளையாடும் அரம் வியப்போடு பார்கவைக்கும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-55
10-12-2024

ஈரம்

நினைக்கின்ற நேரம்
நெஞ்சினிலே பாரம்
கண்ணருகே ஈரம்
கவிதைதனை வரைய

போட்ட சுரத்தில்
பாடலின் ராகத்தில்
கவலைகளும் தூரமாய்
கனவுகளும் ஓரமாய்

வாழ்க்கையே நரகமாய்
வாழ்ந்த வாரமெல்லாம்
தொலைந்தது தூரமாய்
தோழியவள் மாவீரரென!

காந்தள் மலரெடுத்து
கூப்பிய கரத்திலிட
கூச்சலிடுது அந்தநேர
ஞாபகமாய் பேரளிவு!

பேதை நினைவிலொரு
கடந்த கால சீரழிவு
காலநேரம் நெருங்கிவர .
கனவுகளும் ஒளிருமிங்கே.

மனங்களில் ஈரம்கசிய
பலரின் பாரமகற்றி
பாரியின் தேரைப்போல
எம் ஊராருடன் வாழ்வோமே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading