பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

நெஞ்சம் மறக்குமா

19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா

கடந்த காலம் நடந்தது
நினைக்கையில் கனத்த
நெஞ்சம் மறக்குமா

தொடர்ந்த கோலம் முடைந்த
அனர்த்தங்களில் சனத்தைத்
தீர்த்த வஞ்சம் மறக்குமா

படர்ந்த இன அழிப்பும்
வான் குண்டு வெடிப்பும்
சிதறிய உடலமும் உதறிய
குருதி உறைந்து அறைந்த
பசுமரத்தாணி அறுக்குமா

கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி
பஞ்சமா பாதகரின் நரக வாழ்வு
அஞ்சி அஞ்சி வீதியில் விதியோடு
நீதி கேட்டு மதி மயங்கும் சதிகள்
துறக்குமா