மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்

சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்

பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன் பாசமாய் தேடுவேனே
வாமழை நீயும் வசந்தமே துலங்கிடவே
காண்புகழ் ஓங்கிடவே காதலுமே கூடுதே

ஆடிடும் மனசுக்குள் மத்தாப்பு விரியுதே
தேடியே வருவாரு தேவையை உணர்ந்தவரு
மல்லியப்பூ வாசம் என்னாமனோட நேசம்
அல்லல் எனக்கில்லை ஆணழகன் பாருங்கடி

மெல்லெனக் குளிரவும் வைப்பானே என்னையும்
நில்லெனச் சொல்லியே நெகிழும் அகமுமடி
அன்பினால் வளைப்பானே அணைத்துமே நிற்ப்பானே
கட்டிளம் காளையடி களையான சிங்கமடி

விண்மீனாய் ஒளிர்வேனே விரையமும் இல்லாது
ஏங்கும் இதயத்திலே இலட்சியம் தோற்பதில்லை
மூங்கில் காட்டினிலே இசைக்கும் நாதமாக
காத்திருக்கும் நேரமெல்லாம் பூத்திருக்கும் எண்ணமடி

சிவரூபன் சர்வேஸ்வரி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading